வாடிக்கையாளர்கள் இனி ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு பேசும் கால்கள் அனைத்தும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நெட்வொர்க் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனி ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு பேசும் கால்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வாய்ஸ் கால் கட்டணமாக ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு 6 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வருட இடைவெளிக்கு பிறகு ஜியோ மீண்டும் இலவச கால்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
READ MORE- வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கும் வோடோஃபோன் – ஐடியா!
அந்த வகையில், இந்த இண்டர்கனெக்ட் கட்டணம் இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது. ஜியோவின் இந்த இலவச கால் நெட்வொர்க் முறையால் ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஐடியா நிறுவனங்கள் ஜியோவுடன் கடும் போட்டியை எதிர் கொள்ளும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.