ஃபேஸ்புக்கில் இனிமேல் இந்த வசதி கிடையாது..!!!

nearby friends
Facebook

பயனர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்கள் யாரேனும் அருகாமையில் இருந்தால், அவர்களுடைய இருப்பிடத்தை காட்டும் வசதியை கைவிட ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு வசதியை தன்னுடைய செயலியில் அப்டேட் செய்தது. இதன்மூலம் உங்களுடைய நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியம். இது அவசர தேவைக்கு பயன்பட்டாலும், பலருக்கும் இது சிக்கலை அளித்தது.

நண்பர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது போன்ற தோற்றத்தை இந்த வசதி ஏற்படுத்தியது. அதனால் பலரும் இந்த வசதியை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். தற்போது இந்த வசதியை வரும் 31-ம் தேதியுடன் கைவிட ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்காரணமாக ஃபேஸ்புக் செயலியில் இந்த வசதி இடம்பெறாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று வானிலை குறித்த முன்னறிவுப்பு, பயனர்கள் சென்றுவந்த இடங்கள் குறித்த விபரங்கள் ஃபேஸ்புக்கில் இனி வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version