சோனியின் குட்டி ட்ரோன் அறிமுகம்!

உலகின் குட்டி ட்ரோனை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் மிகச்சிறிய ட்ரோனான ஏர்பீக் ட்ரோனை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வருடத்திற்கான சிஇஎஸ் விழாவில் சோனி நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ட்ரோனில் ஆல்ஃபா மிரர்லெஸ் கேமராவை பொருத்தி எடுக்க முடியும்.

மேலும் இந்த ஆல்ஃபா சிஸ்டம் மூலம் பொழுதுபோக்கு துறையில் பல புதிய முயற்சிகளுக்கு இது அடித்தளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

READ MORE- அமோக விற்பனையில் பிஎஸ்5!

இதன் முதற்கட்டமாக, புதிய தொழில்முறை புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்புக்கான தளத்தை இந்த ஆண்டு வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version