உங்களுக்கு வருமானவரி ரீபண்ட்டாக அனுப்புறோம் என குறுந்செய்திகள் வந்தால் ஜாக்கிரதை : வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமானவரி ரீபண்ட்டாக அனுப்புறோம் என குறுந்செய்திகள் வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென வருமான வரித்துறை எச்சரிக்கையளித்துள்ளது.

பொதுத்துறை, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாதச்சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை டி.டி.எஸ்.வகையில் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு  பிடிக்கப்படும் தொகையில் வரி போக மீதம் உள்ள தொகையை, கணக்கு தாக்கல் செய்த பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.  இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Read more – ‘குப்பைக் கொட்ட கட்டணம்’ என்ற அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

வருமானவரி செலுத்துபவர்களுக்கு மொபைல் மூலம் போலியான தகவல்களுடன் குறுந்தகவல்கள் வருகின்றன.  குறிப்பிட்ட தொகை, உங்களுக்கு வருமானவரி அதனுள் நுழைந்ததும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அதுபோன்ற தகவல்கள் மொபைல் போனுக்கு வந்தால், இணைப்புக்குள் செல்ல வேண்டாம் . வருமானவரி துறை சார்பில், எந்தவிதமான தகவல்கள் எதுவும் அனுப்பவில்லை  ரீபண்ட் தொடர்பான நடவடிக்கைகளை, வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்ப்பிக்க வேண்டும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version