ஜியோ மற்றும் மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஏர்டெல் முந்தி சாதனை படைத்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோ உள்ளிட்ட மற்ற டெலிகாம் நிறுவனங்களை முந்தி சாதனை படைத்துள்ளது.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தகவல்படி கடந்த வருடம் ஜியோ மற்றும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஏர்டெல் நிறுவனம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை இந்த வருடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் மாதம் ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் வயர்லெஸ் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜியோ இதே காலத்தில் 14.5 லட்சம் வாடிக்கையாளர்களையே இணைத்துள்ளது.
READ MORE- ஐஃபோனின் அசத்தல் அப்டேட்!
அக்டோபர் மாத நிலவரப்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 33.02 கோடியாகவும், ஜியோ 40.63 கோடியாகவும் உள்ளனர். ஜியோ, ஏர்டெல் தவிர மற்றவைகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.