இந்திய சந்தையில் அசத்தும் வோடோஃபோன் – ஐடியா!

இந்திய மொபைல் சந்தையில் வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனக்கான இடத்தை வாய்ஸ்கால் சேவையில் தக்க வைத்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கை படி, சிறப்பான வாய்ஸ்கால் வழங்கும் சேவையில் கடந்த வருடம் டிசம்பரில் வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

’மை கால்’லில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகியவற்றின் அடிப்படையில் பயனர்களின் மதிப்பீடுகள் கொடுத்தது வைத்தும் இது பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

READ MORE- இந்தியாவில் அறிமுகமாகும் வயோ லேப்டாப்!

அந்த வகையில் வோட்டோஃபோன் 5க்கு 4.9 புள்ளிகளும், ஐடியா 5க்கு 4.3 புள்ளிகளும் பெற்று முதலிடத்தில் உள்ளன. ஜியோ 3.9 புள்ளிகளும், ஏர்டெல் 3.1 புள்ளிகளும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version