வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கும் வோடோஃபோன் – ஐடியா!

வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (தேர்வு செய்யப்பட்ட) சலுகையாக டேட்டாவை அறிவித்துள்ளது.

அந்த வகையில் ரூ. 1499 பீரிபெய்ட் சலுகையில் 50ஜிபி டேட்டாவை அறிவித்துள்ளது. டேட்டா அதிகம் தேவைப்படும் என நினைப்பவர்களுக்கு இதே விலையில் கூடுதல் டேட்டாவுடன் அதாவது 74 ஜிபி வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு வோடோஃபோன் – ஐடியா இதே விலையில் 20 ஜிபி மட்டுமே கொடுத்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 365 நாட்களுக்கு 3600 எஸ்.எம்.எஸ்களும் வழங்கப்படுகின்றன.

READ MORE- வாட்ஸப் இனி இயங்காது. வெளியான அதிரடி அறிவிப்பு!

இந்த சலுகை நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Exit mobile version