வோடோஃபோன்-ஐடியா நிறுவனம் ப்ரீபெய்ட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா என்ற வெளியீட்டை அறிவித்துள்ளது.
வோடோஃபோன்-ஐடியா நிறுவனம் மொபைல் சந்தையில் ப்ரீபெய்ட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா என்ற அறிவிப்பை அதிரடியாக நடைமுறை படுத்த உள்ளது. சந்தையில் குறைந்த அறிவிப்பை வெளியிட்டது ஜியோதான் என்றாலும், இரு மடங்கு டேட்டாவை வழங்கும் நிறுவனமாக வோடோஃபோன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீபெய்ட் சலுகைகளில் மூன்று திட்டங்களுக்கு அதாவது ரூ. 299, ரூ. 499 மற்றும் ரூ. 699க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.
READ MORE- குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி ப்ராசஸர் அறிமுகம்!
அதன்படி இந்த சலுகைகளில் இதுவரை 2 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்பட்டது. இனி 4 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள், வி மூவிஸ், டிவி சந்தா என ரூ. 299 வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கும், ரூ. 499 வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்களுக்கும், ரூ. 699க்கு 84 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது.