விரைவில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வரப்போகும் புதிய அம்சம்..!!

whats app
Whatsapp new feature

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் பயனர்களை புதிய வலைதளத்திற்குள் நுழைய வகைக்கும் முயற்சியாக புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப் முதன்மை வகிக்கிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் இந்த செயலி தடை செய்யப்பட்டு இருந்தாலும், அந்தந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியும் வாட்ஸ் ஆப் செயல்பாட்டை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உலகில் மற்றவருடன் ஆன்லைன் வழியாக தொடர்புகொள்வதற்கு வாட்ஸ் ஆப் இன்றியமையாத செயலியாக உள்ளது. மாறிவரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வாட்ஸ் ஆப் செயலி அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதியதாக ஒரு அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் பயனர்களை அடுத்தடுத்த வலைதளங்களுக்கு இட்டுச்செல்லும் விதமாக இந்த அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வாட்ஸ் ஆப் செயலிக்கான ஸ்டேட்டஸில் நீங்கள் ஏதேனும் வெப்சைட்டின் உரலியை பதிவிட முடியும். தற்போது அதனுடைய சிறியளவிலான ப்ரிவியூடன் கூடிய அம்சம் இனி ஸ்டேட்டஸில் தோன்றும்.

தற்போது இந்த அம்சம் ஆப்பிள் ஐபோன் செயலியில் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இது ஆண்டுராய்டு மற்றும் டெக்ஸ்டாப் வெர்ஷன்களிலும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த அப்டேட்டை தொடர்ந்து மேலும் பல அப்டேட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வாட்ஸ் ஆப் முடிவு செய்துள்ளது.

Exit mobile version