வாட்ஸப் தற்போது புது அப்டேட்டினை தனது பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அப்டேட், சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
தற்போது பலராலும் பயன்படுத்த படக்கூடிய அவசியமான செயலியாக மாறியிருக்கிறது வாட்ஸப். பல கோடி பயனாளர்களை உலகம் முழுக்க கொண்டுள்ள வாட்ஸப் தற்போது புது அப்டேட்டினை தனது பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புது அப்டேட்டில் வால்பேப்பர், எமோஜி, ஸ்டிக்கர் போன்றவற்றில் அசத்தல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது வாட்ஸப். முன்பு வாட்ஸப் சாட் வால்பேப்பராக அனைத்து சாட்டிற்கும் ஒரே வால் பேப்பர் மட்டுமே செட் செய்யும் அம்சம் இருந்தது.
ஆனால், தற்போதைய அப்டேட் படி தனித்தனியாக அனைத்து சாட்டிற்கும் வால்பேப்பரை செட் செய்து கொள்ளலாம். கேலரி புகைப்படங்களை வைத்து கொள்வதோடு வாட்ஸப்பின் சாலிட் கலர் மற்றும் டார்க் அண்ட் ப்ரைட் தீம்களில் அறிமுகப்படுத்தியுள்ள படங்களையும் வைத்து கொள்ளலாம்.
அதே போல ஸ்டிக்கர்கள் மற்றும் எமோஜிகளை தேடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக பயனாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து ஸ்டிக்கர் செயலியையும் வாட்ஸப் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.