யூ-ட்யூப் கோ சேவைக்கு மூடுவிழா: கூகுள் அறிவிப்பு..!!

Google
you tube go

யூ- ட்யூப்பில் கிடைக்கும் யூ- ட்யூப் கோ சேவையை முழுமையாக நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் பயன்படுத்தும் நோக்கில் யூ- ட்யூப்பில் லைட்டர் வெர்ஷன் சேவை தான் யூ- ட்யூப் கோ. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இது அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது இது தேவையற்றதாகிவிட்டது.

பயனர்கள் பலரும் இந்த சேவையை பயன்படுத்துவதை நிறுத்துவிட்டனர். தற்போது இதுகுறித்து யூ- ட்யூப்பை கட்டுக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறைந்த விலை மொபைல் போன்களை வைத்திருக்கும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் யூ- ட்யூப் கோ. மோசமான இணையதள சேவையை கொண்ட பயனர்களுக்கும் இது பயன்பட்டு வந்தது.

ஆனால் இப்போது உலகின் பல்வேறு இடங்களிலும் நல்ல இணையதள சேவைகள் கிடைக்கின்றன. அதேபோல பயனர்கள் பலரும் நல்ல மாடல் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். யூடியூப் கோ சேவையை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்டு மாதத்தில் யூ- ட்யூப் கோ சேவைக்கு விடைகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஒருவேளை இந்த சேவையை பயன்படுத்தி வருபவர்கள் யூ- ட்யூப் செயலியை நிறுவுமாறு கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version