அமேசான் CEO பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ் : காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் அமேசான், இதன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் செவ்வாயன்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டின் நிதி அறிக்கையை வெளியிடும் போது, தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அதற்கான காரணத்தை விளக்கும் விதமாக நீண்ட கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார்.தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை ஒரு மின்னஞ்சல் மூலம் பெசோஸ் தனது ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

அமேசான் வெப் சேவைகள் (Amazon Web Services) தலைவராக உள்ள 52 வயதான அண்டி ஜாஸ்ஸி தான் மொத்த அமேசான் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என அந்த கடிதத்தில் தெரிவித்தார்.

புதிய தயாரிப்புகள் மற்றும் முன்முயற்சிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக பெசோஸ் கூறினார்.

அவர் அமேசானில் மிகப்பெரிய பங்குதாரர். எனவே தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய போதிலும், அவர் நிறுவனத்தின் மீது நிறைய கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். 

செப்டம்பர் 2020 இல், ஃபோர்ப்ஸின் பணக்கார அமெரிக்கர்களின் பட்டியலில் (Forbes list of Richest) ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தார். ஒரே நாளில் 5.22 பில்லியன் டாலர் அதிகரித்ததன் பின்னர் அவரது நிகர மதிப்பு 202 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

இருப்பினும், இந்த ஆண்டு, டெஸ்லா மேலாளர் எலோன் மஸ்க் பெசோஸைக்கை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்காரர் ஆனார். எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு இப்போது 195 பில்லியன் டாலர்களைத் தாண்டியது, பெசோஸ் நிகர மதிப்பு 185 பில்லியனாக இருந்தது.

“புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாஸ்ஸி என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டி ஜாஸ்ஸி நிறுவனத்திற்குள் நன்கு அறியப்பட்டவர். அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பெசோஸ் தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version