ஐபிபிஎஸ் கிளர்க் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது.
அரசு பொதுத்துறை வங்கியில் உள்ள 6,035 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டது. இதையடுத்து, சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் 05.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது. இதில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தேர்வர்கள் 9597557913 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு பெயர், கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருகை தரும் தேர்வர்கள், தங்களது ஐபிபிஎஸ் தேர்வுக்கான விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.
இப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான தகுதியும், அனுபவமும் மற்றும் விருப்பமும் உள்ள பாட வல்லுநர்கள் இதே எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். அவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044-22501032 எண்ணை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி peeochn@gmail.com.
-பா.ஈ.பரசுராமன்.
