ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 3 முறையும் இலவசமாக எடுக்கலாம். அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ₹20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இனி ₹1 சேர்த்து ₹21 வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
