நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியுள்ளது.
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீதிபதிகள் 50 வழக்குகளில் தீர்ப்பளித்தால் 100 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.மேலும், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 4.83 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 72,000 வழக்குகளும் நிலுவை உள்ளன. 5 கோடி மக்கள் தொகை கூட இல்லாத சில நாடுகள் இருக்கும் நிலையில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதியை விரைவாக வழங்குவதற்கு ஆயுதப்படை தீர்ப்பாயத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க சட்ட அமைச்சகம் தயாராக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
