இது என்ன புதுசா??? ‘’முதியவரின் கண்களில் 20 உயிருள்ள புழுக்கள்…’’ சீன மருத்துவர்கள் அதிர்ச்சி

சீனாவைச் சேர்ந்த ஒரு மனிதரின்  கண்களில் சுமார் 20 உயிருள்ள  புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த உலகம் நன்மை தீமைகளால் சூழப்பட்டுள்ளது போல் இந்த உலகில் வாழும் உயிரினங்களும் ஆரோக்கியத்தினாலும் அல்லது நோயினால் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஒரு மனிதரின்  கண்களில் சுமார் 20 உயிருள்ள  புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பேசு பொருளாக மாறியுள்ளது.

ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ், அத்துடன் பன்றிக் காய்ச்சல் என அடுத்தடுத்து புதிய வைரஸ் அங்கிருந்து தோன்றி உலக நாடுகளையும்  வதைத்து வருகிறது.

இந்நிலையில், சீனாவில் வசிக்கும் வான்(60) என்ற முதியவரின் கண்களில் இருந்து சுமார் 20 உயிருள்ள புழுக்கள் அகற்றப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் அவரது கண்களில் எதுவோ ஊர்வதுபோல் உணர்ந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கண்ணிமைக்குக் கீழே சிறிய புழுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது கண்ணில் இருந்து 20க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் எடுக்கப்பட்டன. மேலும் இதுகுறித்துக் கூறிய மருத்துவர்,  இந்த வகையான புழுக்கள் விலங்குகளிடம் இருந்து ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு எனவும் அதனால் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமென எச்சரித்துள்ளனர்.

Exit mobile version