’’அபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் ’’ இந்தியா மீது குற்றம் சுமத்திய பாகிஸ்தான் !

அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் பாகிஸ்தான் மீது வான்வளி தாக்குதல் நடத்துவதுவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்ததாக பாகிஸ்தான் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தான், எஃப்16  ரக ராணு விமானம் இந்திய எல்லைப் பகுதிக்கு வந்தது.

இதை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அந்த விமானத்தை விரட்டிச் சென்ற போது பாகிஸ்தான் சிறைப்பிடிக்கப்பட்டார்.

இதையடுத்து, இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஆனது. இரு நாட்டு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இளைஞர்களின் நாயகனாக அபிநந்தன் போற்றப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் அயாஸ் சாதிக் இந்தியா மீது ஒரு அபத்தமானகுற்றம் சாட்டியுள்ளார்.

அதில் இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் பாகிஸ்தான் மீது வான்வளி தாக்குதல் நடத்துவதுவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்ததாகவும், அப்போது அவரச ஆலோசனை கூட்டத்திற்கு மெஹ்முத் குரேஷி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்ததும் பாகிஸ்தான் ராணு தளபதி பஜ்வாவுக்கு கால்கள் நடுங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version