அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெறப் போவதாக அந்நாட்டில் உள்ள கரடி கணித்துள்ளது.
உலக நாடுகளே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் அமெரிக்க நாட்டு அதிபர் தேர்தல்தான்.
தற்போதைய அதிபர் டிரம்புக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவதால் இந்தியர்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைக்கலாம் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு சமீப காலமாக அதிபர் டிரம்புக்கு எதிராக குவிந்துள்ள விமர்சனங்களே காரணம்.
இந்நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் நடக்கவுள்ளதால் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என்று ரஷ்ய விலங்கியல் பூன்காவில் உள்ள சைபீரிய கரடி கணித்துள்ளது.
இந்து எந்த அளவுக்கு உண்மையாகும் என்று வரப்போகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.