’’பெண்களின் உடலில் பெயர் எழுதி… பாலியல் தொந்தரவு…’’ போலி பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறை !

பெண்களை பாலியல் அடிமையாக வைத்திருந்த பாதிரியாருக்கு  120 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதி அதிரடி  தீர்ப்பு.

பாதிரியார் ஒருவர் தனது அமைப்பில் இருந்த பெண்களுக்கு உணவு கொடுக்காமல் அவர்களை பாலியல் அடிமையாய் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் கேத் ரானியர்(60). இவர் ஒரு பாதிரியார் என்பதால் நெக்சிவிம் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.

இந்த அமைப்பிற்கு பணக்காரர்களும், பிரபலங்கள் நிதி உதவி அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்,  கேத் ரானியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதில். நெக்சிவிம் என்ற அமைப்பில் சேர்ந்துள்ள பெண்களுக்கு உணவு கொடுக்காமலும் தனது பெயரை அவர்களின் உடலில் அச்சிட்டும் அடிமையாக வைத்திருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு கேர் ரானியர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற வழக்கில் கோர்டில் விசாரணை நடைபெற்றது. இதில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

எனவே அவருக்கு 120 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.

Exit mobile version