கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கர்! அப்படி என்ன சாதனை பண்ணார் தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், ஹூலா ஹூப்பிங் எனப்படும் கனமான வளையத்தை உடலில் வைத்து சுழற்றுவதில் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்.

கடினமான டாஸ்க்குகளை எடுத்து, பலர் வெகு சுலபமாக உலக சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று விடுகின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுபவர்களை, கின்னஸ் அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கவுரப்படுத்தும். அவர்கள் படைத்திருக்கும் சாதனை என்ன என விளக்கத்துடன், அவர்களது சாதனை வீடியோவும் பகிரப்படும். இது பாலோயர்களால் அதிகம் விரும்பப்பட்டு வைரலாகி விடும்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கடினமான டாஸ்க்கை எடுத்து, அதில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவரான ஓபரோஇன் ஓடிடிக்பெப் என்பவர், ஹூலா ஹூப்பிங் எனப்படும், கனமான வளையத்தை உடலில் வைத்து சுழற்றி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அதுவும் நின்று கொண்டே செய்யாமல், இரு டேபிள்களுக்கு இடையே, புஷ் அப் எடுப்பது போல படுத்து கொண்டு செய்திருக்கிறார். இடுப்பு பகுதியில் கனமான வளையத்தை சுழற்றி, 3 நிமிடங்கள் 16 வினாடிகள் செய்து அவர் புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

https://www.instagram.com/reel/CN-i90zhRKl/?utm_source=ig_embed

ஹூலா ஹூப்பிங் செய்து கொண்டே 734 படிக்கட்டுகள் ஏறியும் இவர் சாதனை படைத்திருக்கிறார். மேலும் வளையங்களில் 152.52 மீட்டர் தூரம் ஆடி, மிக நீண்ட தூரம் ஆடிய சாதனையும் இவர் வசம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Exit mobile version