ஷாப்பிங் மாலில் பாதுகாப்புப் பணியில் அசத்தும் ‟ரோபோ”… எங்க-னு தெரியுமா!!

அபுதாபியில் பிரபலமான மால் ஒன்றில், ரோபோ ஒன்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதைப் பார்ப்பதற்காகவே, மாலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், பிரபல யாஸ் வணிக வளாகத்தில் ரோபோ ஒன்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டு, அனைவரையும் கவர்ந்து வருகிறது. பொதுவாக மால்களில் எல்லாம்,  காவலாளிகள் தான் கண்காணிப்பு மற்றும் பிற வேலைகளை செய்வார்கள். ஆனால், இந்த மாலில் ரோபோவே காவலாளியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

4 சக்கரங்களுடன் வணிக வளாகத்தை சுற்றி வரும் இந்த ரோபோவின் முகப்பகுதியில், 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ரோபோ, பொதுமக்கள் நடமாட்டத்தை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கிறது. பொதுமக்களின் உடல் வெப்பநிலையைக் கணித்து, யாருக்காவது உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விடுகிறது. முகக்கவசம் அணியாதவர்களைக் கூட ஈசியாக கண்டுபிடித்து, தகவல் தெரிவித்து விடுகிறது, இந்த ரோபா.

மாலில் யாரவது வழி தெரியாமல், இந்த ரோபோவின் முன் நின்று பேசினால், அவர்களுக்கு சரியான வழியைக் கூட காட்டி உதவுகிறது, இந்த அசத்தல் ரோபோ. குறுக்கே யாராவது வந்து விட்டாலோ அல்லது ஏதேனும் வழியில் தடைகள் இருந்தாலோ, அவற்றை உணர்ந்து நகர்ந்து செல்ல உதவும் வகையிலான கருவிகள், இந்த ‘ரோபோ’வில் பொருத்தப்பட்டுள்ளது, இதன் சிறப்பம்சமாகும்.

வணிக வளாகத்துக்குள் மக்கள் கூட்டமாக கூடுவதை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கீழே ஏதாவது பைகள் கிடந்தாலோ அல்லது எங்காவது புகை, நெருப்பு, பள்ளம் போன்ற எதையாவது உணர்ந்தாலோ, உடனடியாக தகவல் கொடுத்துவிடுகிறது, இந்த காவலாளி ரோபோ.

இப்படி வளாகத்தையே சுற்றி சுற்றி அசத்திவரும் இந்த ‘ரோபோ’ காவலாளியை காண்பதற்காகவே, தற்போது யாஸ் மாலுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

Exit mobile version