விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா..

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் சீனா தனது விமான போக்குவரத்திற்கான தளங்களை இரட்டிப்பாக்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் சீனா தனது விமான போக்குவரத்திற்கான தளங்களை இரட்டிப்பாக்கியுள்ளது.

பூட்டானின் ஒரு பகுதியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே, 2017ம் ஆண்டு ஏற்பட்ட டோக்லாம் நெருக்கடி, சீனாவின் நோக்கங்களை மாற்றியதாகத் தெரிகிறது. சீனா மட்டுமே மற்ற நாடுகளை காட்டிலும் அதிக அளவு விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளின் எண்ணிக்கையை கடந்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதை விட அதிகமாக்கி உள்ளது.

இந்த பெருமை சீனாவையே சாரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணுவ விரிவாக்கத்தில் சீனா விமான தளங்கள், மின்னணு போர் வசதிகள், ஹெலிபோர்ட்ஸ் மற்றும் வான் பாதுகாப்பு தளங்களை அமைத்துள்ளது.

இப்போது நடந்து கொண்டிருக்கும் லடாக் நிலைப்பாட்டிற்கு முன்பே சீனா தங்களது ராணுவ வசதிகளை கட்டியெழுப்பிவிட்டது. சீனா இவ்வாறு செய்ததன் மூலம் தன் எல்லை பகுதியின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும் சீனாவானது ராணுவ உட்கட்டமைப்புக்களை அவ்வப்போது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் வலுப்படுத்தி வருகின்றது. இவ்வாறு சிம் டாக் தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியபடுத்திஉள்ளது.

Exit mobile version