மனித உருவில் மிருகம்..கைக்குழந்தையை அடித்தே கொன்ற தந்தை

குழந்தையை தந்தையொருவர் ஆத்திரத்தில் பந்தை போன்று தூக்கிப்போட்டு கொலை செய்துள்ள கொடூரமான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனா நாட்டில் உள்ள ஷாங்க்சி மாகாணம் பாவ்ஜி நகர் பகுதியை சார்ந்த தம்பதிக்கு, பச்சிளம் குழந்தை இருந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குறும்புத்தனம் செய்ததாக தெரியவருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பச்சிளம் குழந்தையின் தந்தை, குழந்தையை கைகளால் தூக்கி ஈவு இரக்கம் என்பது சிறிதும் இன்றி, பெற்ற பிள்ளை என்றும் பாராமல் குழந்தையை பலமுறை உயர தூக்கி அருகே இருந்த சோபாவின் மீது கொலை வெறியில் வீசியுள்ளார்.

https://twitter.com/WBYeats1865/status/1296887220574593026?s=19

அந்த கைக்குழந்தை சோபாவின் மீது பட்டு, பந்தை போல கீழே விழுந்து வீரிட்டு அழுத்துள்ளது. இதன்பின்னர் குழந்தை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொடூர மனம் கொண்ட குழந்தையின் தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version