அப்போ ஓகே இப்போ நோ… ஆப்கானிஸ்தானில் பள்ளிகளில் மாணவிகளுக்கு அனுமதி இல்லை

ஆப்கானிஸ்தான் முழுவதும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசில் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவற்றில் பயில மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Sitting out in the open, children attend Pul-e-Rangeena government primary school for girls in the north-western city of Herat. Like many schools throughout the country, the facility has been overwhelmed with children returning to classrooms after years of conflict. Some 7,000 children attended this school daily in three shifts in 2007 and now in 2009 that numbered have risen to over 9,000 children. Aside from the main building that has 20 classrooms, there are 43 classrooms housed outside in tents and a new building that has been recently built by UNICEF. Due to large number of children attending this school, it is difficult for the school management to house all children in proper classrooms and hundreds of children have to sit out in the open. During rain, cold and windy conditions, school cannot operate and have to close school down completely. Even after rains, tented classrooms take in a lot of water and become muddy, making it creating further misery for children. In recent years in Afghanistan, chronic insecurity and renewed violence, especially in rural areas, continue to impede recovery from decades of war, and limit progress for all the country’s 25 million people – particularly its children and women. The nation’s social indicators rank at or near the bottom among developing countries: average life expectancy is below 45 years; 40 to 60 percent of Afghan children are stunted or chronically malnourished. Herat. Afghanistan.

ஆப்கானிஸ்தான் முழுவதும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைத் திறக்க தலிபான்கள் தலைமையிலான கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவில் பள்ளிக் கூடத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து, 1990-களில் இருந்த அடக்கு முறை ஆட்சியைப்போன்று இந்த ஆட்சி இருக்காது. என்றும், பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில், மாணவிகள் பள்ளிக்கு வருகை தருவது குறித்து எதுவும் அறிவிக்கப்படாததால், அளித்த வாக்குறுதிக்கு மாறாக தலிபான்கள் தற்போது செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவ-மாணவிகளை தனித்தனி வகுப்புகளில் அமர வைத்து பாடம் எடுக்கின்றனர். ஒரு சில ஆசிரியைகளை கடும் ஆடை கட்டுப்பாடுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு செல்லவும் அனுமதித்துள்ளனர். ஆனால் மகளிர் விவகாரத்துறை அமைச்சகத்தில் பெண் ஊழியர்கள் அனுமதிக்கப் படவில்லை. மகளிர் நலத்தறை அமைச்சகத்தின் பெயரையும் “ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல்துறை” என்று தலிபான் அரசு பெயர் மாற்றியிருக்கிறது.

Exit mobile version