பிரான்சில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 900 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலை பரவி வருகிறது. இதன் காரணமாக போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் இதுவரை 1,750 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸ், இங்கிலாந்திலும் இந்த வெப்ப அலை மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்ப அலையால் காட்டுத்தீயும் பரவி வருகிறது. பிரான்சின் ஆர்டிச் ஆற்றை ஒட்டிய நில பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ வோக் நகரை நோக்கி பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வான் வழியாகவும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
-பா.ஈ.பரசுராமன்.
