இஸ்ரேல் மீது வான்வெளித் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் வான்வெளி ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும். மேற்குகரை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது.இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

இதற்கிடையே நேற்று விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது.இதல் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.இதன்காரணமாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே மீண்டும் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version