மறுபடியுமா! வேண்டாம்! ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை புறக்கணித்தார் நடிகர் கிறிஸ் ராக்

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடப்பாண்டிற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு (கிங் ரிச்சர்ட் படத்திற்காக) கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ்ராக் விமர்சனம் செய்ததால், வில் ஸ்மித் கோபமடைந்தார். திடீரென மேடைக்குச் சென்ற அவர் கிறிஸ்ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் உலக அரங்கில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version