உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை பல இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல்வேறு உயிரினங்களும் இதனால் உயிரிழந்துள்ளதை நாம் அறிவோம். டைனாசர் போன்ற உயிரினம் கூட பூமியின் மீது மோதிய விண்கல்லினால் தான் உயிரிழந்தது என்பதை நாம் அறிவோம். விண்கல் மோதல் மட்டுமல்லாது எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், வெள்ளம் என பல்வேறு அழிவுகள் பூமியை தாக்கியுள்ளது. அதில் குறிப்பாக இதுவரை 5 பேரழிவுகள் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்துள்ளன. அதன் காரணமாக இதுவரை பலகோடி உயிரினங்களும் தாவாரங்களும் வேரோடு அழிக்கப் பட்டன. உலகம் தோன்றிய 350கோடி ஆண்டுகளில் இதுவரை 5 மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கடைசி பேரழிவு நிகழ்ந்து 6.5கோடி ஆண்டுகள் ஆன நிலையில் இனி வெகுவிரைவில் மற்றுமொரு இனப்பேரழிவு நிகழும் என விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் அந்த பேரழிவு ஆரம்பித்துவிட்டது எனவும் அதற்கு மத்தியில் தான் நாம் இருக்கிறோம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அழிவுக்கு மனிதன் தான் முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 500 ஆண்டுகளில் உயிர்கள் தோன்றி அழிந்த கணக்கெடுப்புகளை வைத்து பார்க்கும்போது, கடந்த 200 ஆண்டுகளில் அழியும் நிலை மற்றும் அழிந்து போன விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் அபாயகரமான அளவில் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டாக தான் தற்போது நிகழ்ந்து வரும் பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். சமீபத்தில் அஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ அந்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 300 கோடி உயிரினங்கள் அழிந்திருக்கலாம் அல்லது இடப்பெயர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என WWF தெரிவித்துள்ளது. தற்காலத்தில் இத்தகைய பேரழிவு போல் வேரெங்கும் சுட்டிக் காட்டிட முடியாது என தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் தொடரும் பட்சத்தில் மாபெரும் பேரழிவை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.