அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல நடைந்துள்ள சதிச் சம்பவத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடத்தில் இரண்டுவிஷயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது உலகில். ஒன்று கொடூர கொரொனா வைரஸ் மற்றோன்று அமெரிக்காவில் அடுத்துவரவுள்ள அதிபர் தேர்தல்.
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இவருல்லு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
நேற்று அதிபர் டிரம்பும் , ஜோ பிடனும் நேருக்கு நேர் கடுமையான விவாதம் புரிந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல ஆயுதங்களுடன் ஒரு இளைஞர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக 19 வயதான அலெக்சாண்டர் ஹில்லெல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் ஜோ பிடன் தொடர்பாக சில தகவல்கள் சேகரித்துள்ளார். இனவெறிமீது ஈர்ப்புகொண்டவர், சிறார் தொடர்பான ஆபாச காணொலிகள் மற்றும் புகைப்படங்களையும் ஆயுதங்களையும் வைத்திருந்ததால் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸார் இளைஞரிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.