N-95 முககவசங்களை மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், உள்ளிட்ட மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த சுவாச கருவிகளுக்கு பல நாடுகளிலும் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் இந்த வகையான சுவாசக் கருவிகள் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் உபயோகிக்கலாமா என்பது தொடர்பாக அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது’ எமெர்ஜிங் இன்பெக்ஷியஸ் டிசீசஸ்’ ’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது
அதில் வெளியான முக்கிய தகவல்கள் இவை:
என்-95 முகக் கவசங்கள் கொரோனா தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட வான்வழி தொற்றுநோய்பரவலை குறைத்து விடுகின்றன. மேலும் இவை தற்காப்புக் கவசம் உபகரணங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் கொரோனா தொற்றுநோய் பரவல் தடுக்கும் நோக்கத்தில்சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய N-95 முகக் கவசம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு தூய்மைப்படுத்தும் முறைகளின் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நான்கு வெவ்வேறு மாதிரியான முறைகளில் இந்த சோதனைகள் செய்யப்பட்டன இதில் 70 சதவீத எத்தனால் ஸ்பிரே ,ஆவியாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு, 70 டிகிரி செல்சியஸ் உலர் வெப்பம்மற்றும் புற ஊதா ஒளி, கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த நான்கு சோதனையும் வெற்றிகரமாக அமைந்தது இவை அனைத்துமே N-95 முக கவசத்தில் இருந்து வைரஸை நீக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் அதனை மறு பயன்பாட்டுக்கும் அதனுடைய ஆயுள் காலத்தையும் சோதிப்பதற்காக இதே போன்ற தூய்மை முறைகள் மேற்கொண்டு அந்த சுவாசக் கருவியை மீண்டும் சுத்தம் செய்தனர் அப்படி செய்ததற்கு பின் இரண்டு மணி நேரம் அதை முகத்தில் சரியாக பொருத்தி இருக்கின்றனவா என்றும் பார்க்கப்பட்டது அந்த முகக் கவசம் ஒவ்வொன்றையும் ஒரே மாதிரி முறையை பயன்படுத்தி மூன்று முறை தூய்மை செய்யப்பட்டது. அதனில் ஆவியாக்க பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தி தூய்மை செய்யப்பட்ட முகக் கவசம் எந்தவிதமான தோல்வியையும் ஏற்படுத்தவில்லை எனவே இதுபோன்ற தூய்மை முறையில் N95 கவசங்களை மூன்று முறை மீண்டும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
.
எனவே இந்த ஆய்வின் முடிவில் ஆவி ஆக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு முக கவசத்தை படுத்துவதே சிறந்த பயனுள்ள முறை என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் இது கொண்டு பத்து நிமிடம் தூய்மை செய்தாலே வைரஸின் தடயங்கள் இல்லாமல் அழித்துவிடுகிறது.எனினும், உலர் வெப்ப முறை மற்றும் புற ஊதா ஒளி முறை இரண்டுமே நடைமுறையில் உள்ள தூய்மையாக்கல் தான். அவையும் பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், எத்தனால் ஸ்பிரேயை பொறுத்தவரையில், அது முக கவசத்தை சேதப்படுத்தி விடுகின்ற காரணத்தால் என்-95 முக கவசத்தை தூய்மையாக்கும் முறையில் இதனை நாம் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவு என்ன கூறுகிறது என்றால், என்-95 முக கவசங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவற்கு என்று வடிவமைத்துதான் என்றாலும் கூட, அவற்றை சுத்தமாக்கி விட்டு 3 முறை வரை உபயோகிக்க முடியும் என்பதுதான். சுத்தம் செய்யப்பட்ட சுவாச கருவிகளை மீண்டும் அணியும்போது, அவை நம் முகத்தில் சரியாக பொருந்துகிறதா என்பதை மட்டும் நாம் பரிசோதித்துப் பார்த்து அணிவது இதில் மிகவும் முக்கியமானதாகும்.