இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி..!!

Sri Lanka
srilanka shooting

இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்து வருகிறது. சாதாரண மக்கள் வாழவே முடியாத நிலை அங்கு உருவாகியுள்ளது. அத்தியாவசப் பொருட்களின் விலை விண்ணை முட்டு அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் எழுந்த அதிருப்தி காரணமாக இலங்கையில் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாகவே இந்த போராட்டம் தொடர்ந்தாலும், பொதுமக்களும் போலீசாருக்கும் இடையே பெரியளவில் உரசல் ஏற்படாமல் இருந்தது.

ஆனால் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் ஒரு உயிரிழந்தார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி முப்பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இலங்கை போலீசார் மீது மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Exit mobile version