மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற தடை நீக்கம் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ஜோ பைடன் நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன் :

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்று, அவர் அமர்ந்த முதல் நாளே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றுள் பெரும்பாலான சட்டங்கள் முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும்.

மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்றும், இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் மெக்சிகோ சுவர் கட்டுமானத்திற்கும் தடை விதித்து ஜோ பைடன் அசத்தினார்.

Read more – டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்.. திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா ? போலீசார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ பதிவு

இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அன்றைய அதிபர் பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி தந்தார். ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் அந்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில், அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணிபுரியலாம் என்றும், ராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு மட்டுமே தடைவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். பாலினத்தின் அடிப்படையில் ராணுவத்தில் இனி எந்த பாகுபாடும் கிடையாது. தகுதியுள்ள அனைவரும் ஒன்றாக சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்தார்.

Exit mobile version