ரஷ்ய படையினர் திடீர் தாக்குதல்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதியில் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையிலான போரானது ஓராண்டிற்கும் மேலாக நீடித்துத்கொண்டு வருகிறது. இந்த போரில் ரஷியாவின் தாக்குதல்களை மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியோடு உக்ரைன் படையானது எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழு கிராமங்களை உக்ரைன் அரசு மீட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷிய படையினர் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் பலபேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version