ஆப்கனில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு தடை- வித்தியாசமான காரணம் சொன்ன தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

உலகின் மிக இலாபகரமான மற்றும் முக்கியமான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தற்போது தடை விதித்து ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறும் நடனம் மற்றும் அரங்கங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்தது.ஆனால்,அதற்கு மாறாக பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version