கஞ்சாவுக்கு அனுமதி அளித்த பிரபல நாடு..!!

thailand
Marijuana legalisation

ஆசிய நாடுகளில் முதல்முறையாக கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கி தாய்லாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மட்டுமே கஞ்சாவுக்கு சட்ட அனுமதிகளை வழங்கியுள்ளன. இந்த வரிசையில் ஆசியாவில் முதல் நாடாக தாய்லாந்து அரசு கஞ்சா பயன்பாடு மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் போதே, பல்வேறு பயன்பாட்டுக்கு அனுமதியை தாய்லாந்து நீட்டித்துள்ளது.

இனிமேல் தாய்லாந்தில் குளிர்பானங்கள், இனிப்புகள் மற்ற இதர பொருள்களில் கஞ்சாவை கலந்து விற்கப்படும். எனினும் பொதுவெளியில் கஞ்சாவை விற்கவோ அல்லது கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தவோ அனுமதி இல்லை என்று அந்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் பாரம்பரியமாகவே உள்ளூர் வாசிகள் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இந்த கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு வரும் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Exit mobile version