நாயை திருமணம் செய்து கொண்ட பெண்..!

நாயை திருமணம் செய்து கொண்ட பெண்.

இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியை சேர்ந்த 49 வயதானவர் எலிசபெத் ஹோட். இவர் பிரபல மாடல். இவருக்கு முன்பிருந்தே ஆண்கள் மீது அதிகமான வெறுப்பு இருந்துள்ளது. இந்த வெறுப்பால் அவர் ஆண்களை நம்புவதே இல்லையாம். இதற்கு காரணம் அவர் இதற்கு முன்னர் 200-க்கும் அதிகமான ஆண்களை சந்தித்தும் அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உண்மையாக இருந்தது இல்லையாம். மேலும் இரண்டு முறை திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டு இரண்டு முறையும் சில காரணங்களால் நின்று போய் உள்ளது.

இந்நிலையில், எலிசபெத் தான் வளர்த்து வரும் செல்லப்பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். தான் வருத்தமாக இருக்கும்போது எல்லாம் தனக்கு லோகன் தான் ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை கேள்விபட்ட அவரது உறவினர்கள் பலர் எலிசெபத் தனது நாயை திருமணம் செய்யும் முடிவை மாற்றும்படி அறிவுரை சொல்லியும் அவர் மறுத்து விட்டார்.

இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Exit mobile version