உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக துருக்கியும், கிரீஸும் இருந்து வருகின்றது இந்நிலையில் நேற்று மாலை கிரீஸ் கடல் பகுதியான ஏஜியன் கடலிலின் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கிரீஸ் தீவுகள், துருக்கி, பல்கேரியா, வடக்கு மசடோனியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. இதில் அதிகபட்சமாக துருக்கியின் இஷ்மிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 7.0 ஆக பதிவானது.
திடீரென ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்மிர், இஸ்தான்புல், மார்மரா அகிய பகுதியிலும் கிரீஸின் சமோஸ் பகுதியிலும் கட்டிடங்கள் இடிந்து பலத்த சேதமடைந்தன, இதனால் ஏராளமான மக்கள் வீதிளில் தஞ்சம் அடைந்தனர். அதோடு அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் கடல் நீர் நகருக்குள் புகுந்தது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இஷ்மிர் மாகாணத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 120-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது மேலும் கீரிஸ் மற்றும் துருக்கியில் இதர பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.