”விற்பனை முடிவு தூக்கி எறியப்படும்” மிரட்டிய எலான் மஸ்க்; பதிலடி கொடுத்த ட்விட்டர்..!!

twitters

ட்விட்டர் நிறுவனத்தை விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தூக்கி எறியப்படும் என்று கூறிய எலான் மஸ்க்குக்கு ட்விட்டர் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

உலகளவில் சமூக ஊடகங்களில் முதன்மையானதாக உள்ள ட்விட்டர் நிறுவனத்தை அமெரிக்காவின் முன்னணி வணிகர் எலான் மஸ்க் வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 3.30 லட்சம் கோடி) அவர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் 20 முதல் 50 விழுக்காடு வரையில் போலியான கணக்குகள் இருப்பதாகக் கூறி எலான் மஸ்க் விற்பனை ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் ட்விட்டர் முதன்மை செயல் அதிகாரி ட்விட்டரில் 5 சதவீதம் மட்டுமே போலி கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் நிறுவனத்தை விற்பனை செய்யவுள்ளது தொடர்பாக பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கிற்கு விற்பது குறித்து ஆகஸ்டு மாதத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version