கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் பிரிட்டனில்10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் பிரிட்டனில்10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார்

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரிட்டன் சுகாதார செயலர் மாட் ஹான்காக் எச்சரித்துள்ளார். 

கரோனா தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள ஹான்காக் புதிய கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிவப்பு பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள 33 நாடுகளில் இருந்து வருவதை மறைக்கும் பயணிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 

பிரிட்டனில் இதுவரை 39 லட்சத்து 72 ஆயிரத்து 148 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version