இன்று இந்தியாவுக்கு வரும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேப்ரியஸஸ்..!!

Tedros Ghebreyesus
Tedros Ghebreyesus

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியஸஸ் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வரும் நிலையில், பிரதமர் மோடியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் WHO-வின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு டெட்ரோஸ் கேப்ரியஸஸ் வந்தடைகிறார்.

இன்று இரவு அங்கு தங்கிவிட்டு, நாளை ஜாம்நகருக்கு புறப்பட்டு பிரதமர் மோடியுடன் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கிறார். மொரிஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜூகு நாத்தும் இன்று ராஜ்கோட்டுக்கு வருகை தரவுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியஸஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

Exit mobile version