மகாராஷ்டிராவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா, குரங்கம்மைக்கு மத்தியில் பன்றிக்காய்ச்சலால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 43 பேருக்கும், புனேவில் 23 நோயாளிகளுக்கும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதம் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 7 பேர் இறந்துள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் ஜூலை 24ம் தேதி வரை 1,66,132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
பரவி வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து பேசிய மும்பை மாநகராட்சி அதிகாரி டாக்டர் மங்கள கோமரே, “பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் மாநகராட்சி மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சலை தவிர்க்க , பொதுமக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.
முன்னதாக, கேரளாவில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலை தடுக்கும் விதமாக இரண்டு பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொல்ல அம்மாநில அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
-பா.ஈ.பரசுராமன்.