தாறுமாறாக களமிறங்கிய யமஹா எம்டி 09 எஸ்பி பைக்.. சிறப்பம்சங்கள் என்ன?

யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி 09 எஸ்பி பைக் மாடல், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆட்டோமொபைல் துறையில் மேலும் ஒரு புதிய வரவாக யமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி 09 எஸ்பி பைக் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனத்தின் எம்டி 09 மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய 2021 எம்டி 09 எஸ்பி எடிஷன் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எஸ்பி மாடலில் ஸ்டான்டர்டு குரூயிஸ் கண்ட்ரோல், டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட், பிரஷ் மற்றும் க்ளியர் கோட் செய்யப்பட்ட ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
புதிய யமஹா எம்டி 09 எஸ்பி மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் யூனிட், ஸ்லைடு கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், 3.5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 890சிசி என்ஜின் 115 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்போதைய எம்டி 09 மாடலில் 847சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 111 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version