சந்தையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேக்கம் கண்டுள்ள ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இன்னும் இவை மீண்டு வராத நிலையில் பலரின் முதலீடும் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது.
இதனால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களை தொடர்ச்சியாக காண முடிகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 13 என உயர்ந்து ரூ. 4748க்கு விற்பனையாகிறது.
READ MORE- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சலுகை நீட்டிப்பு!
அதேபோல, பவுனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 37984க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 41,056க்கும், வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து ரூ. 72க்கும் விற்பனையாகிறது.