மக்களே உஷாரா இருங்க!! வருவாய் துறை நம்மை கண்காணிக்கப்போகுது…

நம் இந்திய நாட்டில், அரசை ஏமாற்றி, வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைப்பதற்காக, பெரிய பணப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது தொடர்பாக, வருவாய் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

138 கோடி பேர் வாழும் நம் இந்திய திருநாட்டில், சுமார் 1.5 கோடி பேர் மட்டும் தான் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2019 – 20-ஆம் நிதி ஆண்டில், மொத்தம் 6.77 கோடி வருமான வரிப் படிவங்கள் சமர்பிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறையின் வலை தளம் சொல்கிறது. ஆனால் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்திக் கொண்டுவருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

 நம் இந்தியாவில் ஒருவர் 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பாதித்தால், அரசுக்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை என்ற நிலையிருந்தாலும், மக்கள் வரி செலுத்துவதில் அரசை ஏமாற்றுவதால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிவர்த்தனைகளை எல்லாம் வருவாய் துறை விரைவில் கண்காணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஏற்கெனவே தெரிந்த விஷயம் தானே என அசால்டாக இருந்து விடாதீர்கள். ஆனால், இந்த முறை சாதாரணமாக மக்கள் செய்யும் எல்லாப் பரிவர்த்தனைகளையும், பரிமாற்றங்களையும் கண்காணிக்கப் போகிறார்களாம்.அப்படிக் கண்காணிக்கப்படும் போது, வரி செலுத்தாதவர்களை எளிதில் கண்டு பிடித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் தான் பெரிய பணப் பரிமாற்றங்களைக் செய்பவர்களைக் கண்காணிக்கப் போகிறார்களாம்.

எதையெல்லாம் கண்காணிக்கப் போகிறார்கள்

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், நகைகள், டிவி, குளிர் சாதனப் பெட்டி, வாசிங் மிஷின், ஏசி, கல்விக் கட்டணங்கள், டொனேஷன்கள், மின்சார வாரியத்துக்கு செலுத்தும் கட்டணம் போன்றவைகளுக்கு செலவழிக்கும் பணம், இனி வருவாய்த் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட வாய்ப்பு இருக்கிறதாம்.

மேலும், ஹோட்டல்களில் 20,000 ரூபாய்க்கு மேல் செலுத்தும் பேய்மெண்ட்கள், 20,000 ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்துவது, 50,000 ரூபாய்க்கு மேல் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது, 20,000 ரூபாய்க்கு மேல் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது போன்றவைகள் எல்லாம் கூட வருவாய்த் துறையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.

எனவே பெரியப் பெரிய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பர்சேஸ்களைச் செய்யும் போது, முறையாக ரசீதுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பணத்தை ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

Exit mobile version