ஜெட் வேகத்தில் விலையேறும் பெட்ரோல்-டீசல்; அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!! இன்றைய விலை நிலவரம்!!

பெட்ரோல், டீசல் தொடர்ந்து தினந்தோறும் விலை உயர்ந்து வருவது சாமானிய பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இந்த நவீன காலத்தில் உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதனால் தினந்தோறும் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Exit mobile version