வெளியானது ‘துணிவு’ படத்தின் 2-வது பாடல் ‘காசேதான் கடவுளடா’..!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் வெளியானது.

ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துணிவு படத்தின் 2-வது பாடல் ‘காசேதான் கடவுளடா’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Exit mobile version