கே.ஜி.எஃப் 2 முதல் நாளிலேயே இவ்வளவு கோடி வசூலா.? அப்போ பீஸ்ட்..!!

kgf 2
kgf 2

புத்தாண்டை முன்னிட்டு வெளியான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் நிலவரங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் சேப்டர் 1 திரைப்படம் இந்திய சினிமாவையே ஆட்டம் காண வைத்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இரண்டாம் பாகத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை. எனினும், இந்த படத்தை காண ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் நேற்று 14-ம் தேதி உலகளவில் கே.ஜி.எஃப் சேப்டர் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்காரணமாக இந்தியாவில் இதுவரை எந்த படமும் வசூல் செய்யாத அளவுக்கு முதல் நாள் வசூலில் கே.ஜி.எஃப் 2 சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் மட்டும் இந்த படம் ரூ. 60 கோடி வரை முதல் நாள் வசூலை பெற்றுள்ளது. மற்ற மொழிகள் மற்றும் உலகளவில் ஒட்டுமொத்த நிலவரங்களையும் பார்க்கும் போது, கே.ஜி.எஃப் -2 ரூ. 150 கோடி வரை வசுல் சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களும் விடுமுறை என்பதால், நடப்பு வார இறுதிக்குள் இப்படம் ரூ. 500 கோடி வசூலை தாண்டிவிடும் என்று கூருகின்றனர். வசூலில் முதன்மையாக இருந்து வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தை இன்னும் சில நாட்களில் கே.ஜி.எஃப் 2 கடந்துவிடும் என்றும் பாகஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.

Exit mobile version