தாய்மை- கா. ப. ஷமீம் உசேன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 190 தாய்மை- கா. ப. ஷமீம் உசேன்

அன்னை என்றால் தான் பெற்ற குழந்தைகளுக்கு அம்மா (பெற்ற குழந்தைதைகளில் பேதம் பார்க்காமல் பாசம் காட்டுவாள் அம்மா) ஆனால் பேதமின்றி அனைத்து உயிர்கள் மேல் இரக்கம், பாசம், நேசம், கருணை கொள்ளும் தன்மை தான் தாய்மை.

அந்த தன்மை அவளிடம் எப்போதும் இருந்தது அப்போது அவள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள் பெயர் சாந்தி. பள்ளிக்கு குதிரை வண்டி பயணம். படிப்பின் மீது ஆர்வம் குறைவு. ஆனால் பின்நாட்களில் அவளின் குடும்ப பராமரிப்பு. மற்றவர்களிடம் உரையாடும் விதம் அவள் எண், எழுத்தை ஆழ்ந்து கற்றவள் என்பதை பறை சாட்டும். கசடற கற்றுள்ளாள் போல் அதனால்தான் தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தன் தடத்தை பதித்திடுவாள்.

குதிரை வண்டிக்கார தாத்தாவின் சினிமா ஆசைக்கு இவளின் திண்பண்டம் வாங்கும் பணம் டூரிக் டிக்கெட்டாக மாறியது. அன்று அவளுக்கு நாள் முழுவதும் உழைக்கும் தாத்தாவின் எம்.ஜி.ஆர், சிவாஜி படம் பார்க்கும் ஆசையை தீர்த்து வைப்பதில் மட்டற்ற மகிழச்சி. பள்ளியில் சக தோழிகளுக்கு புத்தகத் தேவையை மட்டுமல்ல தான் கொண்டு செல்லும் மதிய உணவு அவர்களுக்கு பிடிந்திருந்தால் அதுவும் அவர்களுக்குத்தான் அன்றே
அந்த வயதிலிருந்தே தொடங்கியது அவளின் தாய்மை.

ஒரு மில் முதலாளியின் 6 குழந்தைகளில்
5 ஆகப் பிறந்த பெண் குழந்தை. ஆகச் சிறந்த பெண் என்று கூறுமளவிற்கு இருந்தது அவள் வாழ்ந்த வாழ்க்கை .ஆம் அதற்குக் காரணம் அவளின் தாய்மை.

தன் தாயின் உடல் இயலாமைக்கு உதவி புரிவதற்காகவும், படிப்பின் மீது இவளுக்கு இருத்த ஆர்வம் குறைவின் காரணமாகவும். 7ஆம் வகுப்பில் பூப்பெய்ந்தியவுடன் பள்ளிக்கு செல்வது இடைநிறுத்தம் பெற்றது.

வருடங்கள் ஓடின அவள் வீட்டிலருந்து
பல விஷயங்களை கற்றுக் கொண்டாள் உறவினர்களிடம் அன்பு பாராட்டி அரவனைத்தல், விருந்தோம்பல், வீட்டுப் பணி, சமையல், ஒப்புரவு இன்னும் பல இவை அவளின் தாய்மை தன்மையை இன்னும் மெருகேற்றியது. சமையல் கலை இவளுக்கு கை வந்த கலையாக ஆனது இவள் சமையல் செய்தால் வீட்டிலிருக்கும் நபர்கள் போக வெளி நபர்கள் யார் வந்தாலும் தாராளமாக பசி ஆறுவர். இவர் சமையலை சாப்பிட்டவர்களுக்கு அந்த
ருசி மறந்து போகவே முடியாது என்னும் அளவிற்கு உபசரிப்புடன் ருசி ஒன்றுகலந்து விடுவதால் அமைந்த விதி.

தன் தாய்மாமன் மகன் சுந்தரத்தை 18 வயதில் மணமுடிக்கிறாள் சாந்தி. சுந்தரம் சிறு வயதிலிருதந்தே சமூக அக்கறை நிறைந்தவன் அதற்கு சிறு உதாரணம் பள்ளியில் படிக்கும்போது ஏழை குழந்தைகள் கல்விக்காக காமராஜர் நிதி திரட்டினார்.  அந்த உண்டியலில் தன்னுடைய தங்க மோதிரத்தை கழற்றி போட்டவன் . எப்பொழுதும் நண்பர்கள் சூழ இருப்பதே அவன் வழக்கம். அவன் மாணவனாக இருக்கும் போதே அரசியலில் அவனுக்கு ஆர்வமும், ஈடுபாடும் அதிகம், கல்லூரி காலங்களில் இளைஞர் அணி தலைவராக அரசியலுக்குள் நுழைந்தார். அதனால் சமூக தொடர்பிலிருந்து அகலாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு வாய்ப்பு. சுந்தரந்தின் அப்பா கண்டிப்பான அரசாங்க அதிகாரி.

சுத்தரத்தின் போக்கை மாற்ற  மகனின் 21 ஆம் வயதிலேயே தன் தங்கை மகளான சாந்தியை நிச்சயித்து திருமணத்தை நிகழ்த்தினார். சுந்தரத்துக்கு சாந்தி மேல் கொள்ளை பிரியம்.ஏனென்றால் அவளுடைய மாண்பு திருணத்திற்கு முன்னரே இவனை வெகுவாக கவர்ந்தன தன் தந்தையிடம் அத்தை மகளை கட்டவேண்டும் என்று வழக்காட வேண்டி வருமோ என்ற நினைத்துக் கொன்டிருக்கையில். அவனுடைய தந்தையே தன் மகனுக்கு குடும்ப பொறுப்பு வர வேண்டும், சமுக  ஈடுபாடு குறைய வேண்டும் என்ற நேரத்தில் சுந்தரம் சாந்தி திருமணத்தை நடத்தினார்.

இருவரும் அறம் செய்வதற்காகவே இல்லறத்தில் இணைந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் அன்பு செலுத்துதல் பண்பாகவும் அறம் செய்தல் அந்த வாழ்க்கையின் பயனாகவும் தொடங்கியது அவர்களுடைய  இல்லறம்.

மங்களம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன் கலம் நன் மக்கட்பேறு என்பதற் இணங்க ஒன்றன் பின் ஒன்றாக நான்கு குழந்தைகளை பெற்றனர்.

அரசியல், சமூக ஈடுபாடு காரணமாக அதிக ஆட்கள் வீட்டிற்கு வந்து போய் கொண்டிருந்தனர் வரும் அனைவருக்கும்
உணவு அல்லது பலகாரம் தராமல் இருக்கக் கூடாது என்ற கொள்கை சுந்தரத்துக்கு அதற்கு சாந்தியின் இயல்பும்
ஒத்துப் போனது.

சுந்தரம் தன் தந்தை, பாட்டனாரின் சொத்தை தவிர தான் எந்த சொத்தும் உருவாக்க வில்லை. மனித நேயத்தினால் ஆட்கொண்ட மனித உள்ளங்களை தவிர . உறவுகளாலும், நண்பர்கள் தன் குழந்தைகளின் பள்ளி தோழமைகள் அனைவரும் வந்து சொந்தம் கொண்டாடும் இல்லமாக அமைந்ததற்குக் காரணம் அவர்கள் இருவரின் அன்பும் அறமும் இணைந்த இல்லறம்.

மனித வாழ்க்கையில் உண்டான சிலபல
கஷ்டங்கள் குறைகள் அனைத்தும் உண்டு ஆனாலும் உடன்பிறந்த தாய்மை குணத்தினால் அதை கஷ்டமில்லாமல் கடந்ததுமுண்டு.

சந்திரம் ஒரு சாப்பாட்டு பிரியர், உலகம் சுற்றும் வாலிபர். இவ்விஷயங்களில் அளவு எடை மீறியதின் விளைவு சில உடல் உபாதைகள். அவ்வபோது வரும் போகும். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சுத்தரத்தின் தந்தை தன் சொத்துக்களை முன்னரே தன் பேரன்கள் பெயரில் பதிந்து விட்டார். ஆனாலும் சுந்தரம் செல்வந்தராகவே வளம் வந்தார். அடுத்த, அடுத்த சம்பந்திகளின் வருகை பேரன்கள், பேத்திகள் மருமகன்கள், மருமகள்கள் என ஒரு பட்டாளம் புடை சூடி உருவானது.

அதோடு சாந்தியும், சுந்தரமும் உருவாக்கிய குடும்பம். அவர்கள் அடியொற்றி வந்த பிள்ளைகள் மீது சில தாய்மை குணம் துளிர்த்திருந்தது. சுந்தரத்தை சிலர் பிழைக்க தெரியாதவர், ஊதாரி என்ற வசையும் பாடினர். வாழ்க்கை அவரவர் உள்ளம் சம்பந்தபபட்டது. தன் பிள்ளைகள் தொட்டது துலங்கி தானாக உருவாயினர். அதை கண்டு திருப்தியடைந்தான்.

சுத்தரத்தின் பயணம் நிறைவுபெறும் நிலையை எட்டியது. அதை அறியாமல் தான் நலமடைந்து மறுபடியும் சுமூகமாக சமூகத்துக்குள் ஊடுறுவுவோம் என்ற தன்னுடைய கணக்கு பொய்த்தது. தான் வெளியே செல்ல முடியாமல் விட்டிலிருந்தான் தீபாவளி நெருங்கி கொண்டு இருந்தது. நண்பர்களை விருந்தழைக்க ஆயத்தமானான். தீபாவளி நாளுக்கு முன் அந்தவருடம் ஒரு இஸ்லாமிய பண்டிகையும் அமைந்தது அதனால் தான் வைக்கும் விருந்துக்கு அனைவரும் வரவேண்டும் என்ற விருப்பத்தில் ஒவ்வொருவரிடமும்
கூறும்போது. தீபாவளி அன்று வைத்துக்கொள்வோம் தவறினால் அடுத்த நாள் வைத்தக் கொள்வோம் என்றே கூறி கொண்டிருந்தான் சுந்தரம் .

இஸ்லாமிய  பண்டிகை முடிந்தது அடுத்த  நாள் தீபாவளி பண்டிகை, காலையில்   இருந்து சோர்வு மேலிட்டு இரவு நெருங்கும்போது மிக அமைதியான முறையில் சாந்தி அருகிலிருக்க இறைவனடி சேர்ந்தார் சுந்தரம்.

அவருடைய பேச்சு உண்மையாயிற்று தீபாவளி அன்று தவறினால் அடுத்த நாள் விருந்து என்ற அழைப்பு. சுந்தரம் தவறி அடுத்து நாள் அவரை அடக்கம் செய்து விட்டு அனைவரும் விருந்துண்டு போயினர்.  சாத்திக்கு சிறிது காலங்களில் கண்ணில் ஏற்பட்ட சிறு குறை காரணமாக பார்வை மங்கினாலும் தாய்மை தீட்டிய கண்களால் மிக பிரகாசமான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

                                  நன்றி.

Exit mobile version