கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று, மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்றார். அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பியபோது, உடல்சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.அதில், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல் ஹாசன் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2ம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார்.

Exit mobile version