எல்லை வழியாக ஊடுருவிய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை -பாதுகாப்பு படை அதிரடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்து இந்திய நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் தீவிரவாதி கும்பலை கூண்டோடு அழைக்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா நகரில் உள்ள பான் சுங்கச்சாவடி நோக்கி இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் வாகனத்தில் வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் அங்கு வாகனங்கள் எல்லாம் சோதனை செய்யப்பட்டது.

அப்போது ஒரு வண்டியை சோதனை செய்ய செல்லும்போது பயங்கர வாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார், அதற்கு ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டர் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அப்பகுதிக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் விரைந்தனர். பயங்கர வாதிகள் இருந்த அந்த வாகனத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். பயங்கரவாதிகள் பயன்படுத்திய 11 ஏகே-47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பா செக்டாரில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி நக்ரோட்டா சுங்கச்சாவடி நோக்கி வருவதாக அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கண்டுபிடித்து சுட்டுக் கொல்லப்பட்டதாக சிஆர்பிஎப் தரப்பில் இருந்து தெரிவித்தனர்.

Exit mobile version